ஈப்போ:
வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (பிளஸ்) தெற்கு நோக்கிய கிலோமீட்டர் (கிமீ) 230.3 இல் சுற்றுலா பேருந்து மற்றும் டிரெய்லர் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளில் ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குறித்த விபத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 73 வயது ஜப்பானிய முதியவர் கோல காங்சார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்று, பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ அசிசி மாட் அரிஸ் கூறினார்.
நேற்று, தைப்பிங் அருகே, வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில், மதியம் நடந்த சம்பவத்தில், சுற்றுலா பேருந்து டிரெய்லரின் பின்புறத்தில் மோதியதில், ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உட்பட 13 பயணிகள் காயமடைந்தனர்.
இதற்கிடையில், முகம் மற்றும் உடலில் காயங்களால் பாதிக்கப்பட்ட 41 வயதான பேருந்து ஓட்டுநரின் சிறுநீர் மற்றும் இரத்த மாதிரிகள் விசாரணை நோக்கங்களுக்காக எடுக்கப்பட்டுள்ளதாகவும், சாலைப் போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41 (1) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அஜிசி கூறினார்.