சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவைத் தொடர்ந்து, பெற்றோரால் துன்புறுத்தலுக்கு ஆளானதாக சந்தேகிக்கப்படும் நான்கு வயது சிறுமியை பொதுநல அதிகாரிகள் நேற்று மீட்டனர்.
பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம், இன்று ஒரு அறிக்கையில், சிலாங்கூர் சமூக நலத்துறை நேற்று விசாரணையை தொடங்கியதாக பெர்னாமா தெரிவித்துள்ளது. குழந்தை மேலதிக பரிசோதனைக்காக செலாயாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் மதிப்பீட்டைத் தொடர்ந்து, குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 25 (2) (b) இன் கீழ், சமூக நலத்துறை குழந்தைக்குப் பாதுகாப்பு வழங்கும். மேலும் இந்த வழக்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகள் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறும் அல்லது 15999 என்ற எண்ணிலும் அல்லது வாட்ஸ்அப் மூலம் 019-261 5999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.