Offline
ஆந்திராவில் லாரி, கார் மோதி விபத்து: 6 பேர் பலி
Published on 10/28/2024 02:29
News

அமராவதி,ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் சிங்கனமலை அருகே உள்ள நாயனபல்லி கிராஸ் என்னும் இடத்தில் வேகமாக வந்த காரின் முன் டயர் திடீரென பஞ்சரானது. இதில், எதிரே வந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த அனந்தபூரை சேர்ந்த சந்தோஷ், ஷண்முக், வெங்கண்ணா, ஸ்ரீதர், பிரசன்னா, வெங்கி ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இவர்கள் அனைவரும் தாடிபத்ரியில் இஸ்கான் அமைப்பில் நடந்த சங்கீர்த்தனை நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஊர் திரும்பிய போது இந்த விபத்து நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து சிங்கனமலை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments