Offline
தாவாவ் தீச்சம்பவம்; ஐந்து வயது சிறுவன் மரணம்!
Published on 10/28/2024 02:31
News

தாவாவ்:

இங்குள்ள கம்போங் ஜாத்தி, பத்து 5 இல் இன்று நள்ளிரவு 12.55 மணியளவில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் 38 வீடுகள் தீயில் எரிந்த நிலையில், ஐந்து வயது சிறுவன் ஒருவன் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டான்.

அதிகாலை 4.50 மணியளவில் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது என்று, தாவாவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் ஜெமிஷின் உஜின் கூறினார்.

உடனே மொத்தம் 27 தீயணைப்பு வீரர்கள் அதிகாலை 1.10 மணியளவில் நகர மையத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்தை அடைந்தனர்.

“இந்த தீ 1.57 ஏக்கர் பரப்பளவில் 38 வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது என்றும் தீயை அணைக்கும் பணி அதிகாலை 5.59 மணிக்கு முடிந்தது,” என்றும் அவர் கூறினார்.

தீச்சம்பவத்திற்கான காரணத்தை தமது துறை இன்னும் ஆராய்ந்து வருகின்றது என்றும் அவர் சொன்னார்.

 

Comments