போர்ட்டிக்சன்:
அடுத்த மாதம் 18 ஆம் தேதி முதல் போர்ட்டிக்சன் கடற்கரையில் நீல நிற கூடாரங்கள் இருக்காது என்று, போர்ட்டிக்சன் மாவட்ட மன்றம் தெரிவித்துள்ளது.
பிரபல பொழுதுபோக்கு தளமான போர்ட்டிக்சன் தெலுக் கெமாங் கடற்கரையில் நீல நிறக் கூடாரங்கள் வணிகர்களால் வாடகைக்கு விடப்படுகிறது. இதனால் வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே அடிக்கடி தகராறுகளை ஏற்படுவதாக அது தெரிவித்துள்ளது.
குறிப்பாக கடற்கரையை பயன்படுத்தாமல் பொதுமக்களை விரட்டும் ஒரு சில வியாபாரிகளின் நடவடிக்கைகளால் இந்த முரண்பாடுகள் தொடர்ந்து அதிகரித்துள்ளது. எனவே வரும் நவம்பர் 18 ஆம் தேதி முதல் போர்ட்டிக்சன் கடற்கரையில் நீல நிற கூடாரங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்படுகிறது என்று அது இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் வணிக தளத்தில் இருந்து அனைத்து கூடாரங்களும் அவற்றின் உபகரணங்களும் அகற்றப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.