Offline
15 வயது பானுப்பிரியாவை காணவில்லை; பொதுமக்கள் உதவியை நாடும் சுபாங் ஜெயா போலீஸ்
Published on 10/28/2024 02:40
News

கோலாலம்பூர்:

கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் சுபாங் ஜெயாவில் உள்ள Aeon Big என்ற இடத்தில் காணாமல் போன 15 வயது சிறுமியைக் கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி கோருகின்றனர் சுபாங் ஜெயா போலீசார்.

நேற்று மாலை 5.32 மணிக்கு பானுப்ரியா பாலமுருகன் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டதாக சுபாங் ஜெயா காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமட் தெரிவித்தார்.

“காணாமல்போனதாகக் கூறப்படும் பானுப்ரியா சுமார் 168 செமீ உயரம், 55 கிலோ எடை, பழுப்பு நிற தோல், பழுப்பு நிற கண்கள், நீண்ட பழுப்பு நிற முடி, அகன்ற மூக்கு ஆகிய அடையாளங்களைக் கொண்டவர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமி இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் அல்லது சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தை 03-78627222 அல்லது 03-78627100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

Comments