Offline
மெல்போர்னில் மலேசியர் கொலை ; மனநோயாளி ஒருவர் கைதுகோலாலம்பூர்:
Published on 10/29/2024 10:33
News

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் பணிபுரிந்த 29 வயதான மலேசிய மருந்தாளர் ஒருவர், மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் ஒருவரால் கடந்த புதன்கிழமை கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு முதல் பொது சுகாதார சேவை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பாதிக்கப்பட்ட கும் சுவான் லியோங், மெல்போர்னின் இவான்ஹோவுக்கு அருகிலுள்ள பெல்ஃபீல்ட் புறநகரில் உள்ள அவரது வீட்டில் காலை 11.30 மணியளவில் சக ஊழியரால் இறந்து கிடந்ததாக ஆஸ்திரேலியாவின் 7 நியூஸ் நெட்வொர்க் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் லியோங் வேலைக்கு வராததால், சக ஊழியர் ஒருவர் அவரைத் தேடச் சென்றபோது பாதிக்கப்பட்டவர் இறந்து கிடக்க கண்டுபிடிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில், வீடற்ற நிலையில் இருக்கும் 54 வயது ஆடவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் தெரிவித்தது. மறுநாள் நீதிமன்றத்தில் அவர்மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சைமன் ஹண்ட்டர் என்று அடையாளம் காணப்பட்ட அந்தச் சந்தேகப் பேர்வழி, மெல்பர்ன் நீதிமன்றத்தில் காணொளி இணைப்பு மூலம் முன்னிலையானார். “தமது கட்சிக்காரர் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் இரண்டு வாரங்களுக்கு அதற்கான மருந்தை உட்கொள்ளவில்லை” என்றும் வழக்கறிஞர் ஜார்ஜியா கார்வெலா நீதிமன்றத்தில் கூறினார்.

இவ்வழக்கை நீதிமன்றம் வரும் ஜனவரி 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Comments