பாங்காங்:தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் சர்வதேச அழகி போட்டியான ‘மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2024’ போட்டிகள் நடந்தது. முன்னதாக அந்தந்த நாடுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிப்பெற்று மகுடம் சூடிய 70 அழகிகள் இந்த போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் பஞ்சாபை சேர்ந்த 20 வயது மாடல் அழகியான ரேச்சல் குப்தா போட்டியிட்டார். பாரம்பரிய உடை, நவநாகரிக உடை உள்ளிட்ட தகுதி சுற்றுக்களுக்கான போட்டிகள் நடந்து முடிந்தன. அனைத்து சுற்றுக்களிலும் அதிக புள்ளிகள் பெற்று ரேச்சல் குப்தா முதலிடம் பிடித்தார்.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த சிஜே ஒபைசா என்பவர் 2-ம் இடம் பிடித்தார். இதனால் ‘மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல்-2024’ வெற்றியாளராக ரேச்சல் குப்தா அறிவிக்கப்பட்டார்.
வெற்றி பெற்ற ரேச்சல் குப்தாவுக்கு முன்னாள் அழகி மகுடம் சூட்டினார். 12 ஆண்டுகளாக நடைபெறும் இந்த ‘மிஸ் கிராண்ட் இண்டர்நேஷனல்’ போட்டியில் இந்திய அழகி வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாகும்.