கோலாலம்பூர்:
இந்தாண்டு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நாடாளுமன்றத்தின் மின்சார்ந்த செயல்பாடுகள் சூரிய சக்தியை அடிப்படையாகக் கொண்டு பெறப்பட்டு வருவதாகவும், இதனைத் தொடர்ந்து உலகில் முதன்முதலாக சூரிய சக்தியை தனது செயல்பாடுகளில் பயன்படுத்திய நாடுகளில் மலேசிய நாடாளுமன்றமும் ஒன்றாக இணைந்துள்ளது என்று நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் கூறினார்.
இன்று திங்கட் கிழமை (அக் 28) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் மாற்ற அமைச்சகத்திற்கான அமைச்சர்களின் கேள்வி நேரத்தின் போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.