வாஷிங்டன்:
அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு அமெரிக்காவில் ஆரம்பமாகிய நிலையில், வாஷிங்டனில் பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஓட்டுப்பெட்டிக்கு மர்ம நபர் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ல் நடக்கிறது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறங்கியுள்ளார். தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு தொடங்கியுள்ள அமெரிக்காவில், வாஷிங்டனில் பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஓட்டுப்பெட்டிக்கு மர்ம நபர் தீ வைத்துவிட்டார். நூற்றுக்கணக்கான ஓட்டுச்சீட்டுகள் எரிந்து நாசமானது. தீ வைத்த மர்ம நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஓட்டுப்பெட்டி எரியும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஓட்டுப்பெட்டிகளுக்கு தீ வைப்பது, ஒட்டு சீட்டுகளை எரிப்பது போன்ற சம்பவங்கள், ஜனநாயகம் முதிர்ச்சி பெறாத நாடுகளில் வழக்கமாக நடப்பவை. அமெரிக்கா போன்ற முன்னேறிய நாட்டிலும் இத்தகைய சம்பவம் நடந்துள்ளது, அந்த நாட்டு அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.