Offline
மீண்டும் மீண்டும் விலை உயர்வு; மலாக்கா kopitiam-க்கு எதிராக சட்ட நடவடிக்கை
Published on 10/30/2024 03:57
News

கோலாலம்பூர்:

மலாக்காவின் பத்து பெரெண்டாமில் உள்ள பிரபல kopitiam உணவகம், ஒரு வருடத்திற்குள் பானங்களின் விலையை 70% வரை அதாவது மூன்று மடங்கு உயர்த்திய குற்றச்சாட்டில் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்கிறது.

2011 விலைக் கட்டுப்பாடு மற்றும் ஆதாயத் தடைச் சட்டம் பிரிவு 21ன் கீழ் kopitiam நடத்துனருக்கு அக்டோபர் 22 அன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சகத்தின் (KPDN) மலாக்கா மாநில இயக்குனர் நொரேனா ஜாபார் கூறினார்.

இந்த நோட்டீசுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க குறித்த உணவக நடத்துருக்கு நவம்பர் 5-ம் தேதி வரை 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

“வாடிக்கையாளரின் புகாரைத் தொடர்ந்து, விசாரணை தொடங்கப்பட்டது என்றும்,அதனடிப்படையில் மேற்கொண்ட சோதனையின் அடிப்படையில், இந்த ஆண்டு மட்டும் மூன்று விலை உயர்வுகள் இருந்தன என்றும் அவர் கூறினார்.

 

Comments