Offline
மித்ரா, இந்தியர்களை பிரதிநிதிக்கக்கூடிய சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடனும் பிரதமர் சந்திப்பு
News
Published on 10/30/2024

நாட்டின் இந்திய சமூகத்தினரின் மேம்பாடு தொடர்பாக, மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (MITRA)வுடனும், இந்திய சமூகத்தை பிரதிநிதிக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடனும் சந்திப்புக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

குறிப்பாக MITRA வழியாக, இந்நாட்டில் இந்திய சமூகத்தைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து வலுப்படுத்த அரசாங்கம் உறுதிப்பூண்டுள்ளதை இச்சந்திப்பின்வழி நான் வலியுறுத்தியுள்ளேன்.

இந்திய சமூகத்தின் வணிக நிதியுதவி உட்பட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் நோக்கில், 2025-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நான் அறிவித்த நிதி ஒதுக்கீடும் இதில் அடங்கும்.

எனவே, இந்த நிதி ஒதுக்கீடு இலக்குகளை அடையும் வகையில், துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் மேற்பார்வையில், உருமாற்றத் திட்டங்களை ஒருங்கிணைத்து, செயல்பாடுகளை அதிகரிக்குமாறு தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சுக்கு (KUSKOP) உத்தரவிட்டுள்ளேன்.

இதன்வழி, அரசாங்கத்தின் உறுதிப்பாட்டுடன், குறிப்பாக இந்திய சமூகத் தலைவர்களின் ஆதரவுடன் MITRA-வை மேலும் வலுப்படுத்துவதன்வழி இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தை மேம்படுத்துவதற்கான தூரநோக்கு வரைவுகள் அனைத்தும் சிறப்பாக ஈடேறும் என பெரிதும் நம்புகிறேன் என்று பிரதமர் தெரிவித்தார்.

 

Comments