Offline
நாளை தீபகற்ப மலேசியாவின் வட பகுதி முழுவதும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
News
Published on 10/31/2024

கோலாலம்பூர்:

நாளை வியாழக்கிழமை (அக் 31) பெர்லிஸ், கெடா, பினாங்கு மற்றும் பேராக் ஆகிய இடங்களில் நாள் முழுவதும் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

அது இன்று வெளியிட்டுள்ள தீபாவளி 2024 வானிலை முன்னறிவிப்பில், புத்ராஜெயா மற்றும் மலாக்காவில் நாளை காலையில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழையும் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் சிலாங்கூர், ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் நாளை பிற்பகல் வரை இதேபோன்ற வானிலை நிலவும் என்றும் அது கூறியுள்ளது.

பகாங், திரெங்கானு, கிளந்தான், சபா மற்றும் சரவாக் ஆகிய இடங்களில் காலை வேளையில் வானிலை தெளிவாக இருக்கும் என்றும், பிற்பகல் மற்றும் இரவில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் மெட்மலேசியா கூறியது.

இந்நிலையில் நாளைக் காலை கோலாலம்பூர் மற்றும் லாபுவானில் வானிலை தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments