Offline
கேரளாவில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து: 150-க்கும் மேற்பட்டோர் காயம்
News
Published on 11/01/2024

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள நீலேஸ்வர் என்ற இடத்தில் அஞ்சூதம்பலம் வீரேர்காவு கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின்போது வாணவேடிக்கை நிகழ்ச்சிக்காக பட்டாசுகள் வாங்கப்பட்டு குடோன் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த குடோனியில் இருந்த பட்டாசுகள் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டு வெடித்து சிதறி மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் திருவிழா பார்க்க வந்த மக்கள் சிக்கிக் கொண்டனர்.

இதில் 150-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 8 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள கன்ஹாங்காடு மாவட்ட மருத்துவமனை, அரிமலா மருத்துவமனை, மிம்ஸ் கண்ணூர், மிம்ஸ் கோழிக்கோடு, கே.ஏ.ஹெச். செருவாத்தூர், மன்சூர் மருத்துவமனை, ஏ.ஜெ. மெடிக்கல் காலேஜ் மருத்துவனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பட்டாசு விபத்து ஏற்பட்ட நிலையில் மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறவில்லை. இந்த சம்பவத்திற்கு காரணமான கோவில் நிர்வாக தலைவர், செயலாளர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர் என கலெக்டர் தெரிவித்தார்.

 

Comments