லங்காவி:
லங்காவிக்குச் செல்லும் ஃபேரி கட்டணம் ஜனவரி 1ஆம் தேதி முதல் RM3 இலிருந்து RM5.50 வரை உயர்வடைகிறது.
கோல கெடா, கோல பெர்லிஸ் ஆகிய பகுதிகளிலிருந்து லங்காவி தீவிற்குச் செல்லும் கட்டணமே இவ்வாறு விலை உயர்த்தப்படுகிறது.
இது உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், மற்றும் உள்ளூர் நாட்டவர் என்று அனைவருக்கும் பொருந்தும் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி LEFTENAN KOMANDER நோர்ஹஃபிஸ் அப்துல் வஹிட் கூறினார்.
புதுப்பிக்கப்பட்ட கட்டணங்கள் இதோ:
மலேசிய குடிமக்களுக்கு:
பெரியவர்கள்
முந்தைய கட்டணம்: RM21 (கோல பெர்லிஸ்), RM26.50 (கோல கெடா)
புதிய கட்டணங்கள்: RM24 (கோல பெர்லிஸ்), RM30 (கோல கெடா)
சிறார்கள்
முந்தைய கட்டணம்: RM16 (கோல பெர்லிஸ்), RM20.50 (கோல கெடா)
புதிய கட்டணங்கள்: RM19 (கோல பெர்லிஸ்), RM24 (கோல கெடா)
மலேசிய குடிமக்கள் அல்லாதவர்களுக்கு:
பெரியவர்கள்
முந்தைய கட்டணம்: RM27 (கோல பெர்லிஸ்), RM34.50 (கோல கெடா)
புதிய கட்டணங்கள்: RM35 (கோல பெர்லிஸ்), RM45 (கோல கெடா)
சிறார்கள்
முந்தைய கட்டணம்: RM19.50 (கோல பெர்லிஸ்), RM25.50 (கோல கெடா)
புதிய கட்டணங்கள்: RM25 (கோல பெர்லிஸ்), RM32 (கோல கெடா)
லங்காவி குடியிருப்பாளர்களுக்கு:
பெரியவர்கள்
முந்தைய கட்டணம்: RM15 (கோல பெர்லிஸ்), RM20 (கோல கெடா)
புதிய கட்டணங்கள்: RM18 (கோல பெர்லிஸ்), RM23.50 (கோல கெடா)
சிறார்கள்
முந்தைய கட்டணம்: RM10 (கோல பெர்லிஸ்), RM14 (கோல கெடா)
புதிய கட்டணங்கள்: RM13 (கோல பெர்லிஸ்), RM17.50 (கோல கெடா)
இருப்பினும், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான விலையில் மாற்றம் இல்லை என்று நோர்ஹாஃபிஸ் கூறினார்.
மூத்த குடிமக்கள் (60 வயது மற்றும் அதற்கு மேல்):
RM13 (கோல பெர்லிஸ்)
RM17 (கோல கெடா)
மாற்றுத்திறனாளிகள் (2 வயதுக்கு மேல்):
RM10 (கோல பெர்லிஸ்)
RM14 (கோல கெடா)
என அவ்வறிக்கையில் அவர் தெரிவித்தார்.