Offline
தாய்லாந்து பிரதமருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு
Published on 12/17/2024 00:53
News

கோலாலம்பூர்:

மலேசியாவிற்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவுக்கு, இன்று டத்தரான் பெர்டானாவில் அதிகாரப்பூர்வ வரவேற்பு வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் பிரதமராகப் பதவியேற்ற பின்னர், மலேசியாவிற்கு தனது முதல் பயணமாக இன்று காலை 9 மணிக்கு மைதானத்திற்கு வந்தடைந்த பேடோங்டார்ன் மற்றும் அவரது கணவர் பிடாகா சுக்ஸாவத் ஆகியோரை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வரவேற்றனர்.

தேசிய மலாய் படைப்பிரிவின் முதல் பட்டாலியனின் மூன்று அதிகாரிகள் மற்றும் 102 உறுப்பினர்களால் அவர்களுக்கு மரியாதையளிக்கப்பட்டது.

இந்த விழாவில் துணைப் பிரதமர்களான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி மற்றும் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப் ஆகிய இருவரும், அமைச்சரவை அமைச்சர்கள், வெளியுறவுத் தூதர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Comments