கோலாலம்பூர்:
திரெங்கானு, பகாங், ஜோகூர், சபா மற்றும் சரவாக் ஆகிய பகுதிகளுக்கு வரும் வெள்ளிக்கிழமை வரை தொடர் மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கையை விடுத்துள்ளது.
திரெங்கானுவின் டுங்கூன் மற்றும் கெமாமன் ஆகிய இடங்களில் தொடர்மழைக்கு வாய்ப்பு உண்டு என்று எதிர்பார்க்கப்படுவதாக அது இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியது; அதேநேரம் பஹாங்கில் உள்ள ஜெரான்துட், மாரான், குவந்தான், பெக்கான் மற்றும் ரொம்பின் ஆகிய இடங்களும், ஜோகூரில் உள்ள சிகாமாட், குளுவாங், மெர்சிங், கோலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு ஆகிய இடங்களும் இந்த வானிலையை எதிகொள்ளும் என்று அது கூறியுள்ளது.
இந்நிலையில் சரவாக் (கூச்சிங், செரியான், சமரஹான், ஸ்ரீ அமான், பெடோங், சரிகேய், சிபு மற்றும் முக்கா) ஆகிய இடங்களும், சபாவில் (பந்தாய் பராட் (ரானாவ் மற்றும் கோத்தா பெலுட்), சண்டக்கான் (தெலுபிட், கினாபடங்கான், பெலூரான், கூடாட் மற்றும் சண்டக்கான்) ஆகிய பகுதிகளும் நாளை முதல் டிசம்பர் 22 வரை தொடர்மழையை எதிர்நோக்கும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.