இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் ஆர்செனல் அணியினர் வெற்றிபெற்றனர்.
கெட்ஜ் கமுயுனிட்டி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்செனல் அணியினர் பிரின்போர்ட் அணியைச் சந்தித்து விளையாடினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்செனல் அணியின் 3-1 என்ற கோல் கணக்கில் பிரின்போர்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அர்செனல் அணியின் வெற்றி கோல்களை கேப்ரியல் ஜேசுஸ், மைக்கல் மெரினோ, கேப்ரியல் மார்ட்டின்ஸ் ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து ஆர்செனல் அணியினர் 39 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தனர். முதலிடத்தில் லிவர்புல் அணியினர் 45 புள்ளிகளுடன் உள்ளனர்.