Offline
தேசிய சேவை பயிற்சித் திட்டம் 3.0 தொடர் 2/2025 இன்று ஆரம்பம்
By Administrator
Published on 05/12/2025 09:00
News

கோலாலம்பூர்:

தேசிய சேவைப் பயிற்சித் திட்டம் (PLKN) 3.0 தொடர் 2/2025 ஐ இன்று தொடங்கி ஜூன் 24 வரை 45 நாட்கள் நடைபெறும், இதில் மொத்தம் 550 பயிற்சியாளர்கள் பயிற்சி பெறுவார்கள்.

இந்தத் திட்டத்தில் 200 பெண் பயிற்சியாளர்கள் இங்குள்ள 515வது பிராந்திய இராணுவப் படைப்பிரிவு முகாமில் தங்கி பயிற்சி பெறுவார்கள் என்றும், அதே நேரத்தில் 350 ஆண் பயிற்சியாளர்கள் பகாங்கின் பெக்கானில் உள்ள 505வது பிராந்திய இராணுவப் படைப்பிரிவு முகாமில் பயிற்சி பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

தேசிய சேவைப் பயிற்சித் துறை (JLKN), ஏப்ரல் 22 அன்று வெளியிட்ட அறிக்கையில், இவர்களுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் 70 விழுக்காடு இராணுவ அடிப்படைப் பயிற்சியையும், 30 விழுக்காடு தேசத்தைக் கட்டியெழுப்பும் கூறுகளையும் உள்ளடக்கியது என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 12 முதல் பிப்ரவரி 25 வரை 515வது பிராந்திய இராணுவ படைப்பிரிவு முகாமில் 18-25 வயதுடைய 116 பயிற்சியாளர்கள் (73 ஆண்கள், 43 பெண்கள்) PLKN 3.0 தொடர் 1/2025 ஐ வெற்றிகரமாக முடித்ததைத் தொடர்ந்து, PLKN 3.0 தொடர் 2/2025 நடைபெறுகிறது.

ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திட்டம், கட்டமைக்கப்பட்ட உடல் மற்றும் மன பயிற்சி அனுபவங்கள் மூலம் மலேசிய இளைஞர்களிடையே தேசபக்தி, தேசிய ஒற்றுமை மற்றும் மீள்தன்மையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Comments