கோலாலம்பூர்:
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைவர் டான்ஸ்ரீ அசாம் பாக்கியின் பதவிக்காலம் மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷ்ம்சுல் அஸ்ரி அபு பாக்கார் தெரிவித்துள்ளார்.
இந்த நியமனம் இம்மாதம் 13-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அவர் சொன்னார்.
மேலும், துணை விதி 5(1) மற்றும் 2009ஆம் ஆண்டு எம்ஏசிசி சட்டத்திற்கு ஏற்ப MACC ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கியின் பதவி காலத்தை 2025-ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதி முதல் 2026-ஆம் ஆண்டு மே 12-ஆம் தேதி வரை மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்க மாட்சிமை தங்கிய பேரரசர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று அவர் மேலும் கூறினார்.
எம்ஏசிசி-க்கு தலைமையேற்றது முதல் அவர் காட்டி வரும் ஈடுபாடு, அனுபவம் மற்றும் அடைவுநிலையைக் கருத்தில் கொண்டு இந்த நியமனம் செய்யப்படுகிறது என்று ஷம்சுல் குறிப்பிட்டார்.
62 வயதான அசாம் பாக்கியின் பதவி காலம் ஏற்கனவே இரு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.