இந்தியா–பாகிஸ்தான் இடையிலான தகவல் போர் தீவிரம் – போலி வீடியோக்கள், AI டீப் ஃபேக்குகள், ஹேக் செய்யப்பட்ட கணக்குகள் வலம்
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், இந்தியா மற்றும் பாகிஸ்தானிடையே சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவுவதால் புது மோதல் தொடங்கியுள்ளது.
பேஸ்புக், X போன்ற தளங்களில், 60 பேரை பலிகொண்ட தாக்குதல்களுக்காக தவறாக ஒட்டப்பட்ட வீடியோக்கள் வலம் வருகின்றன. பல வீடியோக்கள், உண்மையில் இஸ்ரேல்-பாலஸ்தீனம் அல்லது உக்ரைன் போரினை காட்டுபவையாக இருப்பதை AFP உண்மைச் சோதனை குழு உறுதி செய்துள்ளது.
மேலும், இருநாட்டு ஊடகங்களும் சரியாக சோதிக்கப்படாத, அல்லது போலியான ராணுவ வெற்றிக்குறித்த தகவல்களை பகிர்ந்து, மக்கள் மத்தியில் வெறுப்புப் பேச்சையும் பதற்றத்தையும் அதிகரிக்க செய்துள்ளன.