கோலாலம்பூர்: யானைகளுக்கு இடஞ்சார்ந்த நினைவாற்றல் அதிகம். நீண்ட காலத்திற்குப் பிறகும் குறிப்பிட்ட இடங்களையும் நிகழ்வுகளையும் நினைவில் கொள்ளும் திறன் அவற்றுக்கு உண்டு என்று நிபுணர் ஜம்ஹுரி ஜமாலுடின் தெரிவித்தார். இதனால், கெரிக்கில் லாரி மோதி இறந்த குட்டியின் தாய் யானை மீண்டும் அந்த இடத்திற்கு வர வாய்ப்புள்ளது. யானைகள் இறப்பின் கருத்தையும், தாங்கள் சென்ற பாதைகளையும் நினைவில் கொள்ளும் திறன் வியப்பானது. மேலும், யானைகள் கூட்டத்தில் வலுவான பிணைப்பைக் கொண்டுள்ளன. குட்டியை தாய் யானை பல வருடங்கள் வரை கவனித்துக்கொள்ளும் என்றார். சமீபத்தில் கெரிக்கில் லாரி மோதி ஆண் யானை குட்டி ஒன்று உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.