மலாக்கா மருத்துவமனையில் 11 மணி நேரம் காத்திருந்த ஒரு வயது குழந்தைக்கு வலிப்பு வந்ததாக தாய் சித்தி ஆயிஷா ரஹிம் வேதனையுடன் தெரிவித்தார். அதிக காய்ச்சலுடன் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தைக்கு, இரத்தம் பரிசோதனை செய்தும் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், குழந்தையின் உடல்நிலை மோசமடைந்தும் செவிலியர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மறுநாள் அதிகாலை 1 மணியளவில் குழந்தைக்கு வலிப்பு வந்த பின்னரே அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தைக்கு அடினோவைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மருத்துவமனை இயக்குனர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் வந்து மன்னிப்பு கேட்டதாகவும், விசாரணை நடத்துவதாக உறுதியளித்ததாகவும் சித்தி ஆயிஷா கூறினார். இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது