மாண்டேவீடியோ: உருகுவே முன்னாள் ஜனாதிபதி ஜோஸ் முஜிகா (89) காலமானார். முன்னாள் கெரில்லா போராளியான அவர், எளிமையான வாழ்க்கை முறையாலும், முற்போக்கான சீர்திருத்தங்களாலும் புகழ்பெற்றவர். "பேப்பே" என அன்புடன் அழைக்கப்பட்ட முஜிகா, 2010 முதல் 2015 வரை உருகுவேயின் இடதுசாரி அரசாங்கத்தை வழிநடத்தினார். ஓரினச்சேர்க்கை திருமணம், கருக்கலைப்பு மற்றும் கஞ்சா விற்பனையை சட்டப்பூர்வமாக்கும் சட்டங்களை இயற்றினார். லத்தீன் அமெரிக்காவில் சமூக மாற்றங்களை ஏற்படுத்திய அவரது மறைவுக்கு உருகுவே ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளார.