ஷா ஆலம்: நேற்று தெலுக் இந்தானில் ஒன்பது FRU அதிகாரிகள் உயிரிழந்த விபத்து குறித்து விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க புஸ்பாகோம் தயாராக உள்ளது. பொதுவெளியில் வரும் கருத்துகளுக்கோ, விசாரணைக்கோ எந்த பதிலும் அளிக்கப் போவதில்லை என்றும், ஊகங்களை பரப்ப வேண்டாம் என்றும் புஸ்பாகோம் கேட்டுக்கொண்டுள்ளது. அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும் வரை பொறுத்திருக்குமாறு பொதுமக்களை புஸ்பாகோம் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் புஸ்பாகோம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.