அறுவர் கொண்ட குடும்பத்தினர் கடந்த சனிக்கிழமை முதல் உறவினர்களால் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொஹ்ட் அஜிம் எஜாட் இஷாக் (வயது 32), அவரின் மனைவி நுருல் ஹிதாயா கலிஜா ரச்மான் எஃபெண்டி (வயது 31), மற்றும் அவர்களின் ஆறு மாதத்திலிருந்து ஒன்பது வயது வரை உள்ள நான்கு குழந்தைகள் ஆவர்.
மொஹ்ட் அஜிமின் தங்கை நூர் அத்லியா ஷுஹாதா கூறுகையில் அவர்கள் ஜித்ரா அமான் பூங்கா பகுதியில் உள்ள வீட்டில் தங்கியிருந்தனர். அடுத்த நாள் வீட்டிற்கு திரும்பவேண்டும். ஆனால், அண்ணாவின் மாமியார் அவர்கள் வீடிற்கு வரவில்லை எனத் தகவல் தெரிவித்தனர். பின்பு பலமுறை அழைத்தோம், ஆனால் எவ்வித பதிலும் இல்லை என்று அவர் கூறினார்.
அதே சமயம், ஜித்ரா ஆற்றில் ஒரு புரோட்டோன் சாகா கார் காணப்பட்டதாகவும், அதன் பதிவு எண் அண்ணாவின் காருடன் பொருந்தவில்லை எனவும் அவர் தெரிவித்தார். தாம் ஜித்ரா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாகவு சமூக ஊடகங்களில் இந்நிகழ்வை பகிர்ந்துள்ளதாக நூர் அத்லியா தெரிவித்தார்.
மேலும் குபாங் பாசு மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரண்டு மொஹ்ட் ரட்ஸி அப்துல் ரஹீம் காணாமல் போன சம்பவத்திற்கான புகாரைப் பெற்றதைக் உறுதிப்படுத்தினார். குடும்பத்தினரை கண்டறிவதற்கான விசாரணை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் உறுதிப்படுத்தினார்.