முகநூல் கணக்கு மூலம் கடந்த மாதம் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் (Sultan Ibrahim) அவர்களை சிறுமைப்படுத்தி மற்றும் அவதூறன தகவல் தொடர்புகளை அனுப்பியதாக குடும்ப பெண் ஒருவர் மீது ஷா அலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி முன்னிலையில் 39 வயதான சுஹைலா அப்துல் ஹலிம், மீது குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. எனினும் அப்பெண் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். சுஹைலா தெரிந்தே மற்றவர்களை காயப்படுத்தும் நோக்கத்துடன் அவதூறான கருத்துக்களை பதிவிட்டு அனுப்பியுள்ளார்.
ஜனவரி 4 ஆம் தேதி வெளியிடப்பட்ட அவரது பதிவு, ஜனவரி 5 ஆம் தேதி காலை 8.30 மணியளவில் சுங்கை பூலோ மருத்துவமனையில் காணப்பட்டது இதனைத் தொடர்ந்து ஆறு குழந்தைகளுக்கு தாயான சுஹைலா மீது குற்றஞ்சாட்டப்பட்டது. மாதத்திற்கு ஒரு முறை குடியிருப்புக்கு அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்பதோடு, வழக்கு முடியும் வரை அரசு தரப்பு சாட்சிகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்ற கூடுதல் நிபந்தனைகளுடன் 10,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது.
அவர் மீதான குற்றஞ்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 50,000 ரிங்கிட்டிற்கு மேற்போகாத அபராதம்,அல்லது ஒரு ஆண்டிற்கு மேற்போகாத சிறைத்தண்டனை அல்லது இவையிரண்டும் இரண்டும் விதிக்கப்படும்.