ஜோகூர்:
ஜோகூர் பாருவில் உள்ள BANDAR DATO ONN வெளியேறும் சுற்றுவட்டப் பாதை அருகே, PLUS நெடுஞ்சாலையில் இன்று மதியம் 1.10 மணியளவில் பள்ளி மாணவர்கள் சென்ற வேன் மற்றும் சிமெந்து லோரியை மோதியதால் பெரிய விபத்து ஏற்பட்டது.
இதில் மொத்தம் 24 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் ஒரு பெண் வேன் ஓட்டுநர் சிக்கி காயம் அடைந்துள்ளார். மேலும், மூன்று மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். மீதமுள்ள 19 மாணவர்கள் பாதிப்பின்றி மீட்கப்பட்டுள்ளனர்.
தீயணைப்பு துறையினரால் மீட்பு பணி தொடக்கத்திலேயே மேற்கொள்ளப்பட்டு, சம்பவ இடத்தில் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.