வீரர்கள் குறைபாடு மற்றும் பயண சிக்கல்கள் காரணமாக, ஹரிமாவ் மலாயா தனது முதல் சிஏஎஃப்ஏ நேஷன்ஸ் கப்பில் (ஆ.29–செப்.8, தஜிகிஸ்தான்) பங்கேற்பதை ரத்து செய்துள்ளது.
சர்வதேச விண்டோக்கு வெளியே போட்டி நடைபெறுவதால் வெளிநாட்டு கிளப்புகள் வீரர்களை விட மறுத்தன. அதுடன், தஜிகிஸ்தானில் நடைபெறும் போட்டிக்கான பயண செலவு, நிர்வாக சிக்கல்கள், புது ‘72 மணி ஓய்வு’ விதி ஆகியவை பெரிய தடையாக இருந்தன.
"முழு சக்தியுடன் விளையாட முடியாத சூழல். இப்போது இந்த முடிவு தான் சிறந்தது," என தேசிய கோச் பீட்டர் சிக்லமோவ்ஸ்கி கூறினார்.
செப்டம்பர் விண்டோவில் வீரர்களை பயன்படுத்தி, அடுத்த மாதங்களில் லாவோஸ் மற்றும் நேபாளுக்கு எதிரான முக்கிய ஆசிய கப் தகுதிச்சுற்றுக்கான தயாரிப்பில் கவனம் செலுத்துவதாக எஃஎஏம் தெரிவித்துள்ளது.