Offline

LATEST NEWS

ஈரான்: பஸ் கவிழ்ந்து கோர விபத்து – 21 பேர் பலி
By Administrator
Published on 07/21/2025 08:00
News

தெஹ்ரான்,ஈரான் நாட்டின் பர்ஸ் மாகாணம் ஷைரஸ் பகுதியில் இன்று காலை 11 மணியளவில் பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 55 பேர் பயணித்தனர்.

நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ் திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 21 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 34 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Comments