Offline
Menu

LATEST NEWS

கேளிக்கை விடுதி அருகே நின்றிருந்தவர்கள் மீது மோதிய கார்.. 30 பேர் காயம்
By Administrator
Published on 07/21/2025 09:00
News

அமெரிக்காவில் மக்கள் கூட்டத்திற்குள் வாகனம் மோதியதில் 30 பேர் படுகாயமடைந்தனர்.

கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் சாண்டா மொனிகா புயூவெர்ட் பகுதியில் இரவுநேர கேளிக்கை விடுதி இருக்கிறது. இங்கு உள்ளுர் நேரப்படி அதிகாலையில் நுழைய வரிசையில் காத்திருந்த கூட்டத்தின் மீது அந்த சாலையில் வந்த கார் ஒன்று மோதியது.

கூட்டத்தில் பெரும்பாலோர் பெண்கள் ஆவர். காயமடைந்தவர்கள் ஆரம்ப சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 3 பேர் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர்.

ஓட்டுநர் சுயநினைவை இழந்து காரை மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments