Offline
அமெரிக்காவில் ஒலிம்பிக்கில் மாற்றுப்பாலின பெண்களுக்கு தடை!
By Administrator
Published on 07/24/2025 09:00
Sports

வாஷிங்டன்: அமெரிக்க ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் குழு (USOPC) புதிய கொள்கை மாற்றம் மூலம், மாற்றுப்பாலின (Transgender) பெண்கள் இனிமேல் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் பிரிவில் பங்கேற்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த “பெண்கள் விளையாட்டுகளில் ஆண்களை அனுமதிக்க வேண்டாம்” என்ற செயல் உத்தரவுக்கேற்ப மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்க சட்டப்பூர்வ ஒலிம்பிக் அமைப்பாக செயல்படும் USOPC, பெண்களுக்கு நியாயமான, பாதுகாப்பான போட்டி சூழலை உருவாக்குவதே நோக்கம் என தெரிவித்துள்ளது.

இந்த கொள்கை மாற்றம், 2025 ஜூலை 21 முதல் அமலுக்கு வரும்.

மேலும், NCAA (அமெரிக்க கல்லூரி விளையாட்டு அமைப்பு) உள்ளிட்ட அமைப்புகளும் இதேபோன்று மாற்றுப்பாலின விளையாட்டாளர்களுக்கான விதிகளை மாற்றியுள்ளன.

2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கின் முகப்பாக இருக்கவுள்ள நிலையில், இந்த தீர்மானம் பெரிய விவாதத்துக்கிடையே வந்துள்ளது.

Comments