Offline
Menu
”துரந்தர்” படம்…மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டோர் அனுமதி
By Administrator
Published on 08/20/2025 09:00
News

லடாக்,பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தற்போது லடாக்கில் தனது ‘துரந்தர்’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். லடாக்கின் லே மாவட்டத்தில் சில நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்கிடையில், படக்குழுவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படப்பிடிப்புத் தளத்தில் இருந்த பலருக்கு கடுமையான வயிற்று வலி, வாந்தி மற்றும் தலைவலி ஏற்படதையடுத்து, லேவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் புட் பாய்சனால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் சுமார் 600 பேர் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இயக்குனர் ஆதித்யா தாரின் ‘துரந்தர்’ படத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தபடம் வருகிற டிசம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

Comments