Offline
Menu
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா – பட்டம் வென்ற ராஜஸ்தான் அழகி
By Administrator
Published on 08/20/2025 09:00
News

ஜெய்ப்பூர்,மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கான இந்தியாவின் போட்டியாளரை தேர்வு செய்வதற்கான, மிஸ் யுனிவெர்ஸ் இந்தியா போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. ஏராளமான போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

இறுதியில் அந்த மாநிலத்தை சேர்ந்த மணிகா விஸ்வகர்மா மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை வென்றார். கடந்த ஆண்டு வெற்றியாளர் ரியா சிங்கா அவருக்கு மகுடம் சூட்டினார்.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தன்யா சர்மா, ஹரியானாவைச் சேர்ந்த மேஹக் திங்க்ரா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.இந்த ஆண்டு இறுதியில் நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ள 74வது மிஸ் யுனிவெர்ஸ் போட்டியில், இந்தியா சார்பில் மணிகா போட்டியிட உள்ளார்.

Comments