படிவம் 1 மாணவி ஜாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் தவறான அறிக்கைகளை டிக்டோக் வீடியோவில் வெளியிட்டதாக 51 வயது நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குநர் எம். குமார் கூறுகையில், இரண்டு நிமிடங்களுக்கும் மேலான இந்த வீடியோவில் ஜாராவின் பிரேத பரிசோதனையின் முடிவுகள் குறித்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.
முதற்கட்ட சோதனைகளில், ஜாராவின் மரணம் ஒரு திட்டமிட்ட கொலை என்று வர்ணிக்கப்பட்டதால், அவரது வழக்கு விசாரணைகள் தொடர்பான தவறான அறிக்கைகள் வீடியோவில் இருப்பது கண்டறியப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். நேற்று இரவு 10.20 மணிக்கு அந்த நபர் கைது செய்யப்பட்டதாகவும், ஒரு மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் குமார் கூறினார். சந்தேக நபர் வியாழக்கிழமை வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.