ஜாவி:
இன்று காலை சுமார் 7.54 மணியளவில் ஜாவியிலிருந்து பண்டார் காசியா நோக்கி செல்லும் வடக்கு நெடுஞ்சாலையின் 160.3 கிலோமீட்டர் பகுதியில் விபத்து ஒன்று பதிவாகியுள்ளது.
மலேசியா நெடுஞ்சாலை ஆணையம் (LLM) வெளியிட்ட தகவலின்படி, இந்தச் சம்பவம் காரணமாக அவசர சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் இருபுறப் போக்குவரத்திலும் வலது வழிச்சாலை மூடப்பட்டுள்ளது.
இதனால், வடக்கு நோக்கி சுமார் 3 கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதேபோல, தெற்கு நோக்கியும் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் வாகன நெரிசல் பதிவாகியுள்ளது.
சாலைப் பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுவதோடு, கூடுதல் அபாயங்களைத் தவிர்க்க கவனமாக இயக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.