Offline
Menu
ஜகார்த்தாவில் 4.9 ரிக்டர் நிலநடுக்கம் – மேற்கு ஜாவாவில் வீடுகள் சேதம்
By Administrator
Published on 08/22/2025 09:00
News

ஜகார்த்தா:

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில், மேற்கு ஜாவா மாநிலத்தில் பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்தன.

அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 7.54 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பல வினாடிகள் நீடித்தது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவல்படி, பெகாசி நகரின் தென்கிழக்கே சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்க மையம் இருந்தது.

ஜகார்த்தாவுடன் சேர்த்து டெபொக், பொகோர், பூர்வகர்த்தா போன்ற அருகிலுள்ள நகரங்களிலும் மிதமான முதல் வலுவான அதிர்வுகள் உணரப்பட்டதால், மக்கள் தங்கள் வீடுகளையும் உயரமான கட்டிடங்களையும் விட்டு வெளியேறினர்.

கரவாங் மாவட்ட பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்ததாவது, சம்பவத்தில் எட்டு வீடுகள் சேதமடைந்தன; இதனால் எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Comments