Offline
Menu
யுரேனஸ் கிரகத்தை சுற்றும் புதிய நிலா கண்டுபிடிப்பு
By Administrator
Published on 08/22/2025 09:00
News

வாஷிங்டன்,அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையம் நாசா, கனடா நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் பொருட்செலவில் அதிநவீன சக்தி வாய்ந்த தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்கி விண்ணில் நிலைநிறுத்தியது. இதனை கொண்டு விண்வெளியை ஆராய்ந்து வருகின்றனர்.

பால்வெளி மண்டலத்தில் 7-வது கிரகமாக யுரேனசை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஆராய்ந்து வருகிறது. ஏற்கனவே 28 நிலாக்களை யுரேனஸ் கொண்டுள்ளது. இந்தநிலையில் யுரேனஸ் கிரகத்தை மேலும் ஒரு நிலா சுற்றி வருவதை வெப் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. இதனால் யுரேனஸ் நிலாக்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. புதிய நிலாவுக்கு நாசா சார்பில் இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

Comments