Offline
Menu
காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட ஜெயசீலனை கண்டுபிடிக்க உதவுவீர்: போலீஸ் வேண்டுகோள்
By Administrator
Published on 08/22/2025 09:00
News

ஈப்போ: காணாமல் போன ஒரு பதின்ம வயதிரை தேட உதவுமாறு அவரது குடும்பத்தினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஈப்போ காவல்துறைத்தலைவர் துணை ஆணையர் அபாங் ஜைனல் அபிடின் அபாங் அகமது, 16 வயதான எம். ஜெயசீலன் ஆகஸ்ட் 3 முதல் காணவில்லை என்றும், பொதுமக்கள் அவரைக் கண்டுபிடிக்க உதவுவார்கள் என்று நம்புவதாகவும் கூறினார். அவரது கடைசி முகவரி ஜாலான் கசாலி ஜாவியில் உள்ள ஶ்ரீ கெபயாங் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது.

தகவல் தெரிந்தவர்கள் உதவி புலனாய்வு அதிகாரி எஸ்.ஜே.என். ரஃபிதா அப்துல் ரஷீத்தை 013-731 2477 என்ற எண்ணில் அல்லது சுங்கை செனம் காவல் நிலையத்தை 05-548 1637 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்  என்று அவர் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

Comments