Offline
கூச்சிங் ஜாலான் மாதாங் சாலையில் இரு கார்கள் மோதி விபத்து – மூவருக்கு லேசான காயம்
By Administrator
Published on 08/24/2025 15:41
News

கூச்சிங்:

கூச்சிங்கின் ஜாலான் மாதாங் சாலையில் நேற்றுக் காலை இரு கார்கள் மோதிய விபத்தில் மூன்று ஆண்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (Bomba) வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், சம்பவம் தொடர்பில் நேற்றுக்காலை 9.28 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக தெரிவித்தது.

“விபத்தில் இரண்டு கார்கள் சம்பந்தப்பட்டிருந்தன. அந்த வாகனங்களில் ஒன்றில் இரண்டு பேர் பயணித்திருந்தனர். மூவரும் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டனர்,” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மீட்பு பணிக்குப் பிறகு, காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

Comments