பாசிர் மாஸ் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இடம்பெற்ற பகடிவதை (bullying) சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட படிவம் ஆறு (Form Four) மாணவர்கள், போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் ரிமாண்ட் காலம் முடிந்ததைத் தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டதாக பாசிர் மாஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. காமா அஜுரால் முகமட்உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், வழக்குக்கு தொடர்பான மேலதிக உத்தரவுகளுக்கு வழக்கறிஞர் தரப்பிலிருந்து (prosecution) காத்திருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கு தண்டனைச் சட்டம் (Penal Code) பிரிவு 323 (உடல்நலத்துக்கு கேடு விளைவித்தல்) மற்றும் 507B (வன்முறை அச்சுறுத்தல்) கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை, ஒரு மாணவர் தாக்கப்பட்டதாக போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து குற்றச்சாட்டுக்குள்ளான மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அந்த புகாரில், படிவம் 3 மாணவர் ஒருவரை கம்பி கொண்டு கழுத்தை நெரித்தும், அடித்தும் தாக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. தாக்குதலால் மாணவருக்கு உடல் காயங்கள் ஏற்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.