மும்பை: சமீபத்தில் ஓய்வை அறிவித்த புஜாராவை "இந்திய கிரிக்கெட்டின் வைட் வாக்கர்" என்று வர்ணித்த அஸ்வின், நம்பமுடியாத ஒரு கருத்தையும் முன்வைத்துள்ளார்: "விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்ததற்கு புஜாராவின் பங்களிப்பு மிக முக்கியமானது." என்று கூறி உள்ளார்.தனது யூடியூப் சேனலில் இதுகுறித்து விரிவாகப் பேசிய அஸ்வின், புஜாராவின் பங்களிப்பு பல சமயங்களில் கவனிக்கப்படாமல் போனாலும், அது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் பங்களிப்புக்கு எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல என்று அழுத்தமாக கூறி உள்ளார்.