கோலாலம்பூர்:
மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையத்தின் (MCMC) கோரிக்கையின் பேரில், 2022 ஜனவரி முதல் 2025 ஜூலை 31 வரை, மொத்தம் 83,511 பதிவுகள் — அதில் TikTok-ல் 80,657 மற்றும் Telegram-ல் 2,854 பதிவுகள் அவற்றிம் தள நிர்வாகிகளால் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சகம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், இந்த பதிவுகள் அவமதிப்பான, அசிங்கமான, தவறான, மிரட்டல் அல்லது சமூகத்தில் மிகுந்த தாக்கம் ஏற்படுத்தும் உள்ளடக்கங்கள் என சுட்டிக்காட்டப்பட்டதாகவும், இவை அனைத்தும் 1998ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் (Act 588) பிரிவு 233-ஐ மீறியதாகவும் கூறப்பட்டுள்ளது.
“இந்த நடவடிக்கைகள் அரசியல் விமர்சனங்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படவில்லை. சட்ட விதிமுறைகளுக்கு இணங்க, அரசியல் சார்பில்லாமல் மேற்கொள்ளப்பட்டவை,” என்று அமைச்சகம் விளக்கியது.