புத்ராஜெயா:
மெர்டேக்காவை முன்னிட்டு புத்ராஜெயாவில் ஒத்திகை மற்றும் ஃபிளைபாஸ்ட் எனப்படும் இராணுவ விமானங்கள் தாழ்வாகப் பறக்கும் செயல்முறையை எளிதாக்குவதற்காக கோலாலம்பூர் முனையக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நாளை முதல் வெள்ளி வரை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வான்வெளி மூடப்படுவதாக மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (சி.ஏ.ஏ.எம்.) அறிவித்துள்ளது.
இந்த முறை விமான சாகசத்தில் மலேசிய அமலாக்க நிறுவனங்களின் ஹெலிகாப்டர்கள் உள்பட 33 விமானங்கள் இடம்பெறும்.
இந்த கட்டுப்பாடு பொதுமக்கள் மற்றும் விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அவசியமானது என CAAM ஓர் அறிக்கையில் கூறியது.