கோலாலம்பூர்: நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில், பிந்துலு (Bintulu) நகரின் வானில் தோன்றிய மர்மமான ஒளி, மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்த விசித்திரமான ஒளி, தஞ்சோங் கிடூரோங் (Tanjung Kidurong), கம்போங் ஜெப்பா (Kampung Jepak), நகரின் மையப் பகுதி போன்ற இடங்களில் தெளிவாகக் காணப்பட்டது. இந்த ஒளியின் தோற்றம், சமூக வலைத்தளங்களில் பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்தது. சிலர், இது வேற்றுகிரகவாசிகளின் வருகை என்றும் கூறினர்.
ஆனால், வானியல் ஆய்வாளர் டாக்டர் ஸுர்வீனா ஷார்காவி (Dr. Zurwina Sharkawi), இது ஒரு இயற்கை ஒளி நிகழ்வு என்று விளக்கினார். இது ‘லைட் பில்லர்ஸ்’ (light pillars) என்று அழைக்கப்படுகிறது.