தெஹ்ரான்,ஈரான் தலைவர் காமேனி பேசியதாவது:-
அமெரிக்கா கொடுக்கும் அழுத்தம் பலன் தராது. ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய 12 நாள் தாக்குதலால் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர முடியாது. அணு சக்தித் திட்டம், தீர்க்க முடியாத பிரச்சனை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எங்களுக்குள் பிரிவினையை விதைக்க முயற்சி செய்கின்றனர். கடவுலின் ஆசியால் மக்கள் ஒன்றுபட்டு இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.
கடந்த மாதம், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 12 நாட்கள் கடுமையான மோதல் நிகழ்ந்தது. ஈரானில் அணு விஞ்ஞானிகளையும் ஈரானில் நூற்றுக்கணக்கான மக்களையும் இஸ்ரேல் குண்டுவீசி கொன்றது. பதிலுக்கு ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிலும் கடும் சேதங்கள் ஏற்பட்டன.