இயக்குநர் கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி கடந்த ஜூலை 31 ம் தேதி திரையரங்கில் வெளியான படம் ‘கிங்டம்’. இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், ரசிகர்கள் கொண்டாடினர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இதில், விஜய் தேவரகொண்டாவின் தோற்றமும் சலிப்பில்லாத திரைக்கதையும் ரசிகர்களைக் கவர்ந்தது. .கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றிப்படமானது. ‘கிங்டம்’ படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில், இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வருகிற 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.