புத்ராஜெயா:
சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) மேற்கொண்ட சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கையில் பரிசோதிக்கப்பட்ட 500 வணிக வாகன நிறுவனங்களில் 60% க்கும் அதிகமானவை தேவையான தரநிலைகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டன.
இதற்கு GPS சாதனங்களை முறையற்ற முறையில் நிறுவியதே முக்கிய காரணமாகும் என்று JPJ இயக்குநர் ஜெனரல் டத்தோ ஏடி ஃபேட்லி ராம்லி கூறினார்.
ஜூன் 23 முதல் ஜூலை 31 வரை நடைபெற்ற இந்த நடவடிக்க, நாடு முழுவதும் உள்ள சுமார் 3 லட்சம் வணிக வாகன இயக்குநர்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.
எனினும் இந்த “முடிவுகள் ஏமாற்றமளிக்கின்றன,” என்று அவர் JPJ கவுண்டர்களில் இ-வாலட் மூலம் பணமில்லா பரிவர்த்தனை முறையை அறிமுகப்படுத்திய பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.