கோலாலம்பூர்:
மலேசியாவின் சமீபத்திய தேசிய மேம்பாட்டுத் திட்டமான 13வது மலேசியா திட்டத்தை (13MP) முன்னெடுத்து செல்ல சீனாவுடனான ஒத்துழைப்பு முக்கிய பங்கு வகிக்கும் என்று கல்வியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
13MP கல்வி சீர்திருத்தங்கள், சுகாதாரத் தர மேம்பாடு மற்றும் மனித மூலதன வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கிறது. அதேசமயம் செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் மலேசியாவை பிராந்திய முன்னணியில் நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழக மலேசியாவின் (IIUM) லீ பீ மே கூறுகையில், சீனா இத்துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது மற்றும் மலேசியாவுக்கு வலுவான ஆதரவை வழங்க முடியும்.