வாஷிங்டன்,அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ‘தி பார்பர்’ சட்ட நிறுவனம், கடந்த 2014 முதல் 2025 மே மாதம் வரை செல்பி எடுக்கும்போது ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் காயங்களை கண்காணித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு, செல்பி எடுக்க நேரடியாக முயற்சித்து மரணத்தை விளைவிக்கும் நிகழ்வுகள் குறித்து செய்திகள் மற்றும் கட்டுரைகளை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்டது.
அதில் அதிக மக்கள் தொகை, ரெயில் தண்டவாளங்கள், பாறைகள் போன்ற ஆபத்தான இடங்களுக்கு செல்வது, சமூக ஊடக கலாசாரம் உள்ளிட்ட பல காரணிகளை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அதன் அடிப்படையில் ஆய்வு செய்யபட்டது. இதில் உலகளவில் பதிவான அனைத்து நிகழ்வுகளில் 42.1 சதவீதம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.